சிறப்பாக நடைபெற்ற, “புளொட் பிரித்தானியாக் கிளையின் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
சிறப்பாக நடைபெற்ற, “புளொட் பிரித்தானியாக் கிளையின் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது நேற்றையதினம் லண்டனில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
புளொட் பிரித்தானியாக் கிளையின் பொறுப்பாளர் தோழர் பிரேம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் பிரித்தானியாக் கிளையின் செயலாளர் தோழர்.சுகந்தன் எனும் அலெக்ஸ் தொகுத்து வழங்க சிறப்பாக நடைபெற்றது. தோழர்களினால் ஈகைச்ச்சுடரை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைக்க, மலர்அஞ்சலி, மௌன அன்ஜசாலி ஆகியவற்றைத் தொடர்ந்து கழக முக்கியஸ்தர்கள், ஏனைய அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோரின் அஞ்சலி உரைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( PLOTE) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( DPLF ) ஐக்கிய இராச்சிய கிளையின் 36-வது வீரமக்கள் தினம் நேற்றைய தினம் ( 03.08.25 ) லண்டனில் மிகவும் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் அனுஸ்டிக்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியக் கிளையின் பொறுப்பாளர் தோழர் நேதாஜி அவர்களின் தலைமையில் மாலை 5 மணிக்கு மெளன அஞ்சலியுடன் வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமானது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலாளர் தோழர் க. உமாமகேஸ்வரன் ( முகுந்தன் ) அவர்களின் சகோதரர் திரு க. ஞானேஸ்வரன் அவர்களினால் ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு வீரமக்கள் தினம் ஆரம்பிக்கப்பட்டது. பெரும்பான்மையான கழகத் தோழர்கள், சக இயக்க பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், நண்பர்கள் என பலதரப்பட்டோரும் இந்த வீர மக்கள் தினத்தில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோரது உருவ படங்கள் வைக்கப்பட்டு அங்கு சமூகமளித்த அனைவராலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியக் கிளைச் செயலாளர் தோழர் அலெக்ஸினால் வரவேற்புரையும் நிகழ்ச்சித் தொகுப்பும் நடத்தப்பட்டு தோழர்கள் அனைவரின அறிமுகத்துடன் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து உணர்ச்சிபூர்வமான அஞ்சலி கவிதை தோழர் டயா மயூரனினால் வழங்கப்பட்டது. எம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது வீரமக்கள் தின உரையும் அங்கு ஒலிபரப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எமது சக இயக்க உறுப்பினர்கள் பலரும் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலை இயக்கம் ( TELO ) ன் பிரித்தானியக் கிளை பொறுப்பாளர் தோழர் சாம், மற்றும் செயலாளர் தோழர் திரு, ஈழப் புரட்சி அமைப்பின் ( EROS ) முன்னாள் முக்கிய உறுப்பினர் தோழர் ரவி சுந்தரலிங்கம், விரிவுரையாளர் டாக்டர் நடா மணிவண்ணன், விரிவுரையாளர் நாகேந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அல்வின், கழகத்தின பல ஆரம்பகால தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என 20 க்கும் மேற்பட்டோர் வீரமக்கள் தின அஞ்சலி உரைகளை நிகழ்த்தினார்கள்.
தேனீர் இடைவேளையினை தொடர்ந்து, தோழர்களினால் கழகத்தின் பரவலான எதிர்கால திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும் சக அமைப்புகளை எவ்வாறு இணைந்து எதிர்காலத்தில் செயல்படுதல் மேலும் எம் விடுதலைக்கு வித்தாகிய அனைத்து இயக்க போராளிகளையும் எவ்வாறு ஒரு பொது தினத்தில் நாம் அஞ்சலி செய்வது போன்ற பல கருத்துக்களும் உரையாடியவர்களினால் அங்கு முன்வைக்கப்பட்டு, இராப்போசன விருந்துடன் 36வது வீரமக்கள் இனிதே நிறைவேறியது.
நிகழ்வில் “மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவரும், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், கழகத்தின் செயலதிபருமான தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களையும், அவரது வழிகாட்டலில் தம்முயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகளையும் மற்றும் அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து வருடாவருடம் நடாத்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வானது வழமை போல் இவ்வருடமும் புளொட் பிரித்தானியாக் கிளையின் சார்பில் நேற்றையதினம் இங்கு நினைவு கூறப்பட்டது. இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.
சிறப்பாக நடைபெற்ற, “புளொட் பிரித்தானியாக் கிளையின் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (வீடியோ)












































