;
Athirady Tamil News

அக்கரைப்பற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம்

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான செயற்குழுக் கூட்டம் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எம். சபீஸின் ஏற்பாட்டில் நேற்று (15) அக்கரைப்பற்றில் நடைபெற்றது.

கட்சியின் அமைப்பாற்றலை வலுப்படுத்துவதும், மாவட்ட மட்ட அரசியல் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஸ்ரப் தாஹீர், உயர்பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், அமைப்பு விரிவாக்கம், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு செயல்பாடுகள், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், மக்களுடன் நெருக்கமான தொடர்பை பேணிக் கொண்டு, மாவட்டத்தின் சமூக-அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயற்பட வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் கொள்கை நோக்கங்களை மக்களிடையே விரிவுபடுத்தி, அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் ஆதரவை அதிகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.