இலங்கையில் 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் தரையிறக்கம்; எதற்காக தெரியுமா!
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைக் பார்பதற்காக, 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இந்த விமானங்கள் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மேலும் பல நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தன.
குறித்த விமானங்கள் மூலம் பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜே. ஷா மற்றும் பல கோடீஸ்வர வர்த்தகர்களும் வருகை தந்திருந்தனர்.
போட்டி நிறைவடைந்த்ததும் அனைவரும் தற்போது தாம் வந்திறங்கிய அதே விமானங்களிலேயே மீண்டும் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
