எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் தடயவியல் பகுப்பாய்வு
எல்ல – வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து இன்று (6) காலை மீட்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த விபத்து தொடர்பான தடயவியல் பகுப்பாய்வு அறிக்கை நாளை மறுதினம் அரச பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் தங்காலை நகரசபையின் செயலாளர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் இன்று இறுதி அஞ்சலிக்காக காலை 10 மணிக்கு நகரசபையில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.