250 மில்லியன் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் சுங்கத் துறையினரால் பறிமுதல்
கொழும்பில் உள்ள ‘கிரேலைன் II’ (Grayline II) சரக்கு முனையத்தில், உள்ளூர் இறக்குமதியாளர் ஒருவருக்குத் தெரியாமலேயே அவரது பெயரில் மோசடியாக விடுவிக்கப்படவிருந்த சட்டவிரோத பொருட்களை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது சிகரெட்டுகள், மஞ்சள், இஞ்சி, முந்திரி மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய 40 அடி நீளமுள்ள கொள்கலன் ஒன்றை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று சோதனையிட்டனர்.
கைப்பற்றப்பட்ட இச்சரக்குகளின் மதிப்பு 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என்றும், இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.