;
Athirady Tamil News

மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் குடும்ப பெண் ; சந்தேகத்தில் பொலிஸார்

0

இன்று (21) அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தங்களது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் குறித்த பெண் தனது சேலையில் தொங்கிய நிலையில் இறந்துவிட்டதாக தோட்டத் தொழிலாளர்கள் வட்டவளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், வட்டவளை பொலிஸார் இந்த சடலத்தைக் மீட்டனர்.

இது தற்கொலையா அல்லது கொலையா என்பதைத் தீர்மானிக்க, வட்டவளை பொலிஸார், அட்டன் பொலிஸ் பிரிவு புலனாய்வுக் குழுவின் உதவியுடன், பல பிரிவுகள் வழியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.