;
Athirady Tamil News

அர்ச்சுனா எம்.பி சற்றுமுன்னர் கைது!

0

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தனது வாகனத்தை பலவந்தமாக நிறுத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்திற்கு இடையே அங்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர், பின்னர் கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரை திட்டியிருந்தார்.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை சென்றிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.