வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு
ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சொந்த வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தும் இடமாற்றமானது கிடைக்கப்பெறாத அதேவேளை 13 வருடங்கள் கடந்தும் சில அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எவ்வித இடமாற்றமும் இ்ன்றி சொந்த மாவட்டத்தில் தொடர்ந்தும் கடமையாற்றி வருவதாக தெரிவித்ததோடு தமக்கான முறையான நியாயமான இடமாற்றக் கோரிக்கை மகஜர் ஒன்றினை வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் (13.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளித்தனர்.

