பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருந்தமை உறுதி
இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் நேற்று (1) கைப்பற்றப்பட்ட, பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு இன்று (02) காலை குறித்த படகு கொண்டு வரப்பட்டபோதே இச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த படகிலிருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.