;
Athirady Tamil News

ஹார்முஸ் நீரிணையில் பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல்

0

ஹார்முஸ் நீரிணையில் பிரித்தானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் பயணித்த ஒரு பிரித்தானிய சரக்கு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதனால் தீப்பற்றி எரிந்ததாகவும் பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் (UKMTO) அறிவித்துள்ளது.

கப்பல் மீது ஏவப்பட்ட ஒரு எறிகணை (unknown projectile) தாக்கியதால், கப்பலில் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ras Al Khaimah (UAE) கடற்கரையிலிருந்து சுமார் 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கப்பலில் இருந்த குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், தீயணைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதிலிருந்து ஒரு மணிநேரத்திற்கு பிறகு, மற்றோரு கண்டெய்னர் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

மேலும், துபாய் மேற்கு பகுதியில் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மற்றொரு கண்டெய்னர் கப்பல் மீது ப்ராஜெக்டைல் தாக்குதல் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில், பல நாடுகளின் கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த தாக்குதல்கள், ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையில் 12-வது நாளாக தொடரும் போரின் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் வழித்தடமாக இருப்பதால், இத்தகைய தாக்குதல்கள் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.