;
Athirady Tamil News

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில்நடைபெற்ற முன்மாதிரியான உதவி வழங்கல் நிகழ்வு

0

ஞாயிற்றுக்கிழமை ( 14-12-2025 ) அன்று புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் முழுமையான சிரமதான நிகழ்வு நடைபெற்றது.
காலை 7. 30 மணிக்கு ஆரம்பமாகிய சிரமதான நிகழ்வு இரவு ஏழு மணி வரை நடைபெற்றது . சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டபவர்களுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்களின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் நிதியுதவியில் நுளம்பு வலைகள் மற்றும் அத்தியாவசிய உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு மதிய உணவு , சிற்றுண்டி, தேநீர் விருந்து , குளிர்பானம் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அம்மையார் நினைவாக 15 மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டதோடு வைத்தியசாலையின் பாவனைக்கான கிருமி நாசினி பொருட்களும் வழங்கப்பட்டன .

குறித்த செயற்பாட்டு நிகழ்வுகளில் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் பிரதம குருக்களும் , கனடா துர்க்கை அம்மன் ஆலய பிரதம குருக்களுமான பஞ்சாட்சர ஐயர் கிருஸ்ணராசா குருக்கள் , தமிழ் நாடு விழுப்புரம் மாவட்ட ஆலய சுப்பிரமணிய குருக்கள், புங்குடுதீவு முரளி சர்மா குருக்கள், சூழகம் அமைப்பின் போசகரும் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் தலைவருமான கௌரவ கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி, சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்க தலைவர் வைத்தியர் C. தாரணி, புங்குடுதீவு உப பிரதேச சபையின் பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

விசேடமாக புங்குடுதீவு சுலக்சனா இலவச கல்வி நிலையத்தின் ‘விழுதுகள்’ குழும மாணவர்களும் ஆசிரியர்களும் மேற்படி சிரமதான நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் வெறுமனே நிவாரணப் பொருட்களை வழங்காது சுமார் 75 பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்மாதிரியான பாரிய சிரமதான செயற்பாடாக இச்செயற்பாடு அமைந்துள்ளதாக புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் தாரணி தெரிவித்திருந்தார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.