தைப்பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி அனுர குமார!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இலங்கை ஜனாதிபதி ஒருவர் தமிழ்ர் திருவிழாவால் தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணம் விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.