பற்றி எரியும் ஈரானின் எண்ணெய் கிடங்குகள் ; தலைநகரில் அடுத்தடுத்து தாக்குதல்கள்
ஈரானில் எண்ணெய் கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கிடங்குகள் பற்றி எரிவதால் டெஹ்ரான் நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் கரும்புகை பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடன் இஸ்ரேல் தம் பங்குக்கு ஈரான் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளை இஸ்ரேல் குறி வைக்க ஆரம்பித்து இருக்கிறது.
குண்டுமழை
அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளை கண்டறிந்து அதன் மீது குண்டுமழையை பொழிந்து வருகிறது.
எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை மட்டுமல்லாது, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது. இந்த தொடர் தாக்குதல்கள் எதிரொலியாக, டெஹ்ரானில் கடும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.
160 சிறுமிகளை கொன்றது ஈரானே ; புதிய தலைமைக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால்
டெஹ்ரானின் தெற்கு பகுதியில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகம் அருகே உள்ள கிடங்கு தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் நடந்திருந்தாலும் சுத்திகரிப்பு நிலையம் சேதம் அடையவில்லை என்று ஈரான் அரசு ஊடகம் கூறி உள்ளது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.