;
Athirady Tamil News

ஈரான் போர்! பிரிட்டனைக் கேலி செய்த டிரம்ப்!

0

ஈரான் போர் காரணமாக பிரட்டனைக் கேலி செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதில் தாக்குதலாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளும் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் சண்டையில் உதவப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பிரட்டனைக் கேலி செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இது குறித்து ட்ரூத் சோஸியல் சமூக ஊடகத் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது :

“ஒருகாலத்தில் நமது நட்பு நாடாகவும் அனைத்திலும் சிறந்ததாகவும் இருந்த பிரிட்டன், இறுதியாக 2 விமானம் தாங்கிக் கப்பல்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இனி எங்களுக்கு அவை தேவையில்லை. ஆனால், நாங்கள் நினைவில் கொள்வோம். போரில் வெற்றி பெற்ற பிறகு இணையும் யாரும் எங்களுக்குத் தேவையில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.