;
Athirady Tamil News

20 வயதுதான் ஆனால்… பிரபல நாட்டின் அரியணை ஏறும் இளம் ராணி!

0

ஸ்பெயினின் இளவரசி லியோனர் (Leonor, Princess) , தனது 20-வது வயதில் நாட்டின் அரியணையில் அமரத் தயாராகி வருகிறார்.

இவர் பதவியேற்கும்போது, கடந்த 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் பெண் ஆட்சியாளர் (Queen Regnant) என்ற பெருமையைப் பெறவுள்ளார்.

150 ஆண்டுகளுக்குப் பின் ராணி
இளவரசி லியோனர் (Leonor, Princess) தற்போதைய ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப் (King Felipe VI) மற்றும் ராணி லெட்டிஸியாவின் (Queen Letizia) மூத்த மகள் ஆவார்.

வருங்கால மகாராணியாக, (Leonor, Princess) நாட்டின் முப்படைகளுக்கும் (தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை) தலைமை தாங்கும் வகையில் தீவிரமான 3 ஆண்டு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

லியோனர் (Leonor, Princess) வேல்ஸில் உள்ள UWC அட்லாண்டிக் கல்லூரியில் தனது சர்வதேச இளங்கலை படிப்பை முடித்துள்ளார். பல மொழிகளில் பேசும் திறன் கொண்டவர்.

இளவரசி லியோனர்(Leonor, Princess) தனது பொறுப்புணர்வால் ஸ்பெயின் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளார். இவரது வருகை ஸ்பெயின் முடியாட்சியை (Monarchy) நவீனப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இதற்கு முன்னதாக ஸ்பெயினை ஆட்சி செய்த பெண் ஆட்சியாளர் இரண்டாம் இசபெல்லா (Isabella II) ஆவார், இவரது ஆட்சி 1868-ல் நிறைவடைந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.