ஈரான் அணுசக்தி மையத்திற்கு அருகே அதிரடி தாக்குதல்: வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்
ஈரானின் இஸ்ஃபஹான் (Isfahan) அணுசக்தி மையத்திற்கு அருகில் உள்ள இரண்டு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அணுசக்தி பொருட்கள் உள்ள முக்கிய வசதிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தற்போதைக்கு கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் ஏதுமில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA உறுதிப்படுத்தியுள்ளது.
கதிர்வீச்சு ஆபத்து
ஈரான் அணுசக்தி தளங்களில் கதிர்வீச்சு தொடர்பான எவ்வித அசாதாரண சூழலும் கண்டறியப்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானின் மற்ற முக்கிய அணுசக்தி மையங்களான நடான்ஸ் (Natanz) மற்றும் புஷெர் (Bushehr) ஆகிய இடங்களில் மேலதிக சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என IAEA தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான பொருட்கள் சேமிக்கப்பட்டுள்ள இடங்கள் பாதுகாப்பாக இருப்பதை சர்வதேச அணுசக்தி முகமை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.