செர்பியா அரசில் ஊழல்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு பேரணி
நோவி சாத்,
செர்பியா நாட்டில் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் உசிக் பதவி வகித்து வருகிறார். அவருடைய அரசில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அதில், அரசில் உள்ள ஊழல் அதிகாரிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் சொத்துகளை பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர்.
இதற்காக மாணவர்கள் ஒன்றாக கூடி, தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு திரட்டும் வகையில், கடந்த மாதம் மக்களிடம் இருந்து 4 லட்சம் கையெழுத்துகளை வாங்கி உள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.
அரசுக்கு எதிரான அடுத்த பேரணி வருகிற 27-ந்தேதி பெல்கிரேடு நகரில் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.