இரத்தினபுரி செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகள் மற்றும் பலாங்கொடை, இறக்குவானை , சூரியகந்த உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதலான பனி பொழிவு காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.