;
Athirady Tamil News

யாழில் இரு பிரபல பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் செயல் ; நகர சபையின் அதிரடி

0

பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று (20) காலை நடைபெற்றபோதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இராணுவத்தின் சிற்றுண்டி சாலை
இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள நிலையில் இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில் புகைத்தல் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

குறித்த இராணுவம் நகரசபை சட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெறப்படாது இயங்குவதால் அதற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை எனில் அந்த இராணுவ சிற்றுண்டிச்சாலையை மூடுவது போன்ற தீர்மானங்கள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்துடன் கனரக வாகனங்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் காலை 6:45 மணி முதல் 8 மணி வரையும், பாடசாலை முடிவடையும் நேரத்தில் பகல் 12 மணி முதல் 2 மணி வரை பயணிக்க தடை விதிப்பது.

இடையூறாக நிறுத்தப்படும் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊர்திகளுக்கு உடனடி தண்டமாக ரூபா 2000/- அறவிடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.