போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மகன்! தந்தை செய்த அதிர்ச்சி செயல்
பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மேற்படி இளைஞர், தந்தையாருடன் முரண்பட்டு வீட்டில் தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வந்துள்ளார்.இது இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் தந்தையான 48 வயது நபரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.