;
Athirady Tamil News

அதிர்ச்சி சம்பவம்.. பாழடைந்த கிணற்றில் 2 வாலிபர்கள் பிணம்: கொலையா? என போலீசார் தீவிர விசாரணை

0

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் காட்டுப்பகுதியில் பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது, கிணற்றில் அழுகிய நிலையில் 2 ஆண்களின் உடல்கள் கிடந்தன. இறந்து கிடந்தவர்களுக்கு 30 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும். அவர்களின் உடல்கள் தலைகுப்புற கிடந்தன. கிணற்றின் அருகே கைலி, டீசர்ட், செருப்பு, செல்போன், அரிவாள், கடப்பாரை ஆகியவை கிடந்தன.

இதைத்தொடர்ந்து லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையி லான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாய வேலைக்கு வந்த அவர்கள் தவறி விழுந்து இறந்து இருக்கலாமா? அல்லது அவர்களை யாராவது கடப்பாரையால் அடித்துக்கொலை செய்து கிணற்றில் வீசி சென்று இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.