;
Athirady Tamil News

நைஜீரியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல் ; 200 பேர் உயிரிழப்பு

0

நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் உள்ள 2 கிராமங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 3-ஆம் திகதி இரவு, குவாரா மாநிலத்தின் வோரோ மற்றும் நுகு ஆகிய இரண்டு தொலைதூர கிராமங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகள், கிராம மக்களைச் சூழ்ந்து கொண்டு, பலரின் கைகளைக் கட்டிப் போட்டு சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், பல வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய லகுராவா என்ற ஆயுதக் குழுவினர் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

நைஜீரிய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களால் ஏற்பட்ட விரக்தியிலேயே, அவர்கள் இது போன்ற கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.