;
Athirady Tamil News

கொழும்பு–மட்டக்களப்பு வீதியில் விபத்து ; வயோதிபர் உயிரிழப்பு

0

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு வீதியில் முச்சக்கரவண்டியில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த வயோதிபர் மீதே முச்சக்கரவண்டி மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதேநேரம், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபரைக் கைது செய்ய அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.