;
Athirady Tamil News

செல்லப்பிராணியால் நீதிமன்றம் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ள பெண்

0

சுவிட்சர்லாந்தில், தன் பூனையால் நீதிமன்றம் செல்லும் நிலை ஒரு பெண்ணுக்கு உருவாகியுள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்ட பூனை
சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் பெண்ணொருவர் வளர்த்துவந்த பூனை ஒன்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதை அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, பூனையை பரிசோதித்த கால்நடை மருத்துவர், தற்காலிகமாக அதற்கு சிகிச்சையளித்த நிலையில், அந்தப் பூனையால் சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் அதற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அந்தப் பெண் அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். மறுநாள் பூனை உயிரிழந்துவிட்டது!

ஆகவே, மருத்துவர் புகார் செய்ய, அந்தப் பெண் நீதிமன்றம் செல்லவேண்டிவந்துள்ளது. அவர் மீது விலங்குகள் கொடுமை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

அந்த பூனைக்கான அறுவை சிகிச்சை கட்டணம் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும். இலங்கை மதிப்பில் அது 4,02,081.15 ரூபாய்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.