;
Athirady Tamil News

மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சிங்கப்பூரிலும் உணரப்பட்டது

0

கோலாலம்பூர்

மலேசியாவின் போர்னியோ தீவுக்கு உட்பட்ட சபா மாகாணத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது.

இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், கடலோர நகரான கோட்டா கினாபலுவில் இருந்து 100 கி.மீ. வடகிழக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 619.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்தது.

Also Read
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சிங்கப்பூர் பயணம்
மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சிங்கப்பூரிலும் உணரப்பட்டது
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை எதனையும் பிறப்பிக்கவில்லை. இதேபோன்று சராவாக் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மலேசிய தீபகற்பத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

சிங்கப்பூரில் தோவா பயோ, பாலேஸ்டியர் மற்றும் புங்கோல் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள நெட்டிசன்கள் சிலர், நாங்கள் நிலஅதிர்வை உணர்ந்தோம் என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.