மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் மாரடைப்பால் உயிரிழப்பு
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் முகுல் ராய் (71). கடந்த 2011-ம் ஆண்டு ஐ.மு.கூட்டணி அரசின் 2-வது ஆட்சியில் ரயில்வே அமைச்சராக பணியாற்றினார்.
மேற்கு வங்க அரசியலின் சாணக்கியர் என முகுல் ராய் அழைக்கப்பட்டார். கடந்த 2017ம் இவர் பாஜக.வில் சேர்ந்தார். கடந்த 2021-ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார். தேர்தலுக்குப் பின் இவர் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில் இவர் உடல் நிலை பாதிப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு காரணமாக இவர் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்தார்.