பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டம் (PSTA) அமல்படுத்தக் கூடாது எனவும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் சபை அமர்வு, தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தலைமையில் இன்று (26) இடம்பெற்றது.
இதன்போது குணராஜா டெனிஸ் கமல்ராஜால் குறித்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.
சபையில் இருந்த உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.