;
Athirady Tamil News

தாக்குதல்களில் கொல்லப்பட்ட அலி கமெனியின் குடும்ப உறுப்பினர்கள்! வெளியான தகவலால் பதற்றம்..

0

ஈரான் உச்ச தலைவர் அலி கமெனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை தாக்குதல்களில் உயிரிழந்ததாக, இஸ்லாமிய புரட்சிகர காப்பாளர் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (Fars News Agency) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உச்ச தலைவரின் அலுவலகத்தில் உள்ள “தகவலறிந்த வட்டாரங்கள்” மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

ஈரான் உச்ச தலைவர் கமெனி
மேலும், கமெனியின் மருமகள்களில் ஒருவரும் தாக்குதல்களில் உயிரிழந்ததாகவும் ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு கமெனியின் மருமகள் மற்றும் மருமகன் உயிரிழந்ததாக சில தகவல்கள் பரவியிருந்தன.ஆனால் அவை பின்னர் மறுக்கப்பட்டன.

இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமெனி உயிரிழந்தாரா என்பது குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.