;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் இந்திய எம்.பி. – ஆதரவு திரட்டும் பணிகள் தீவிரம்

0

வாஷிங்டன்,

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இடைக்கால தேர்தலில் கலிபோர்னியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், ரோ கன்னா (வயது 50). இந்திய வம்சாவள்ளிய சேர்ந்த இவர் 5-வது முறையாக அமெரிக்காவின் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். உலகை உலுக்கிய எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்களை வெளியிட்டதிலும், ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரவும் இவர் எடுத்த முயற்சிகளுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டவர்.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, 2028-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்திலில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்க இவர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்காக முன்னாள் எம்.பி. ஜமால் பவ் மேன், முற்போக்கு வியூகவியலாளர் மோமிகி கோன்ஸ்ட் இணைந்து ‘ரன் ரோ’ என்ற பெயரில் இயக்கம் தொடங்கி உள்ளனர்.

இதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு நன்கொடை திரட்டுதல் மற்றும் அவரது போட்டிக்காக ஆதரவு திரட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ களமிறங்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக அவர் விரைவில் டிரம்ப் அரசில் இருந்து வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை மார்கோ ரூபியோ மறுத்து உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.