;
Athirady Tamil News

யாழ்ப்பாண கடலில் காணாமல் போன 23 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் விசாரணை
சம்பவப்படி, குறித்த மீனவரின் படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியது. அதனை சீர்செய்ய முயன்ற போது, அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போனார்.

பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளியின் தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை கொட்டடிப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடத்தினர்.

இன்று காலை 10 மணியளவில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மீட்பு செய்யப்பட்டவர் பருத்தித்துறை கொட்டடியில் வசிப்பவர், 23 வயதுடைய விஜயகுமார் நிக்சன் என்பவராகவும், ஒரு குழந்தையின் தந்தையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.