யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் (03.03.2026) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இக் கலந்துரையாடலில் பொருட்களைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வது தொடர்பாக, குறிப்பாக அரிசி விலையினை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதனை உறுதிப்படுத்துவது தொடர்பாக அரசாங்க அதிபரால் கலந்துரையப்பட்டது. மேலும் வர்த்தக சங்கங்களின் கருத்துக்களை அரசாங்க அதிபர் கேட்டறிந்து கொண்டதுடன், பொதுமக்கள் பாதிக்காதவகையில் செயற்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பாவனையாளர்கள் அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி எஸ். நிலாந்தன், புலனாய்வு உத்தியோகத்தர்கள் வை. பிரமிளன், மாவட்ட நிறுவைகள் அளவைகள் உதவி அத்தியட்சகர் பா. இராஜேஸ்வரன், யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ. ஜனத்குமார், செயலாளர் திரு. சிவகுமாரன் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.