;
Athirady Tamil News

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

0

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து அமெரிக்கா – இஸ்ரேலை பழித்தீர்ப்போம் என்று சூளுரைத்துள்ள ஈரான் பதிலடியில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள 27 அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. பக்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில் குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குவைத்தில் 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

5-வது நாளாக இந்த மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்சத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்சத் தலைவராக தேர்வாகியுள்ளார். 56 வயதான மொஜ்தபா காமேனி, அயதுல்லா அலி காமேனியின் மூத்த மகன் ஆவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.