;
Athirady Tamil News

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி.. (வீடியோ, படங்கள்)

0

லண்டனில் வசிக்கும் பாபு மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக் கிராமத்தில் மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கிக் கொண்டாடினார்.

புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரான லண்டனில் வதியும் யோகி அன்றில் பாபு என அன்புடன் அழைக்கப்படும், யோகலிங்கம் மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு பாபு மீரா குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்படி உதவிகள் வழங்கப்படடது.

கோபியின் பிறந்தநாளில் வன்னி எல்லைக் கிராமமொன்றில் மாணவ,மாணவிகளான சிறுவர்கள் அவர்களின் பெற்றோர், உறவுகள் ஒன்று கூடி அவருக்கு பிறந்தநாள் பாட்டிசைத்து கேக் வெட்டி மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்கள். கோபிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிய சிறுவர்கள் பிறந்தநாள் கேக்கினை உண்டு மகிழ்ந்ததுடன், கலந்து கொண்டோருக்கு சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இத்துடன் திரு.திருமதி பாபு மீரா தம்பதிகள் தங்கள் ஏகபுதல்வனான கோபியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கிராமத்தில் உள்ள மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்தனர்.

மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்*வேண்டுகோளுக்கு இணங்க லண்டனில் வசிக்கும் கோபி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வவுனியா தரணிக்குளம் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவ சிறார்களும், பெற்றோர்கள் கலந்து கொண்டு லண்டனில் வசிக்கும் கோபி அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

வவுனியா தரணிக்குளம் ஆசிரியர் திருமதி.நந்தினி சிவநாதன் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.திருமதி. பாபு மீரா தம்பதிகளின் செல்வப் புதல்வன் கோபி அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தும் அதேவேளை, தனது பிறந்த நாளை முன்னிட்டு மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கியமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா,
இலங்கை.
11.06.2026

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி.. (வீடியோ)

 

 

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. 

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.