வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் வைத்தியசாலையில்
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் இன்று (12) அதிகாலை வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றால் வீடு ஒன்றின் மீது பெரிய மரம் விழுந்ததில் நாலவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் , மேல் இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
மேலும், பலத்த காற்றால் மரங்கள் முறிந்து வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.