;
Athirady Tamil News

யாழ் குருநகர் படகு விபத்து; இருவர் பலி…10 பேர் மீட்பு ….மேலதிக விபரம்

0

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் இதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தினார்.

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 7 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

யாத்திரிகர்கள் சென்ற படகு
குருநகர் பகுதியைச் சேர்ந்த இருவரின் சடலமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 13 வயது சிறுவன், 04 பெண்கள் 08 ஆண்கள் என 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் இருவர் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் சாதாரண சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை இவ்வாறு விபத்துக்குள்ளானது.

குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.