;
Athirady Tamil News

ACMCயின் “Islamic Life Studies” பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவு…

0

ACMCயின் “Islamic Life Studies” பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவு…
பாறுக் ஷிஹான்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் சமூக, கலாச்சார மற்றும் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்காக “Future Leader” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட “Islamic Life Studies” 7 நாள் பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

நாட்டின் 21 நிலையங்களில், 35க்கும் மேற்பட்ட வளவாளர்களின் பங்களிப்புடன் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சி மூலம் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்தத் திட்டம் இளைஞர்களின் இஸ்லாமிய நெறி, சமூகப் பொறுப்பு உணர்வு மற்றும் தலைமைத்துவ திறன் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், மருதமுனை பிரதேசத்தில் நடைபெற்ற பயிற்சி நெறியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் வளவாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும்  சனிக்கிழமை (7) மாலை   மருதமுனையில் நடைபெற்றது.

கட்சியின் மருதமுனை பிரதேச அமைப்பாளர் கலீல் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கலந்து கொண்டார்.

அத்துடன், இப்பயிற்சி நெறியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ். எம். சபீஸ், மருதமுனை பிரதேச பொறுப்பாளர் அதிபர் மஃறூப், இணைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சமட் ஹமீட் உள்ளிட்ட வளவாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.