;
Athirady Tamil News

ஈரானின் புதிய உச்ச தலைவர் தப்பிக்க முடியாது; சீறும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் !

0

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரானுக்கு இடையிலான போர் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஈரானின் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் மறைவுக்குப் பின்னர், மொஜ்தபா கொமெய்னி புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

எருசலேமில் பெஞ்சமின் நெதன்யாகு,
இந்நிலையில் நேற்று (12) எருசலேமில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு நடவடிக்கை குறித்து கூறுகையில் எதிர்பார்த்ததை விட போர் சரியாக சென்று கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் நேரடி மோதல் மிகவும் தீவிரமாகவும் வலிமையாகவும் உள்ளது. ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கொமெய்னியின் உயிருக்கு எதுவித உத்தரவாதமும் இல்லை என்றார்.

ஈரானில் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதற்காகவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் செயல்பட்டு வருகின்றது. இனி அவர்கள் தப்பிக்க முடியாது. ஈரான் மக்கள் சுதந்திரப் பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். உங்களுக்கு உதவ வருகிறோம். ஆனால், இறுதியில் முடிவு எடுப்பது உங்கள் கைகளிலேயே உள்ளது என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஈரானின் புதிய உச்சதலைவர் தாக்குதலில் காமடைந்து ஒரு காலை இழந்ததுடன், கோமா நிலைக்கு சென்றதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.