மேலும் அமைச்சர் மற்றும் ஆளுநர் அவர்களின் வழிகாட்டுதல்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைவரது ஒத்துழைப்புக்களாலும் அபிவிருத்தி திட்டங்களை சாத்தியமாக்க கூடியதாக இருந்ததாகவும், பல்வேறுபட்ட சவால்கள் இருந்த போதிலும் அதனை வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளதாகவும், அதற்கு அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், ஒவ்வொருவரும் மாவட்டத்தின் அபிவிருத்தியில் அக்கறை கொண்டவர்களாக இருப்பதுடன், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதுவதன்
ஊடாக யாழ்ப்பாண அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுக்க ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறும் தெரிவித்துடன், மக்களுடைய சமூகப் பொருளாதார வாழ்வியல் தேவைகளை அடையாளம் கண்டு அதனை நிறைவேற்றத்தக்க வகையிலே செயற்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையுரையாற்றுகையில், எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதகமான நிலை என்பது எமது நாட்டுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாக பல்வேறு நாடுகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளதை நாம் அறிந்த விடயம் எனவும்,
இதற்கு அமைவாக கலந்துரையாடல்கள் மற்றும் நிகழ்வுகளை மட்டுப்படுத்த வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்பது யாழ்ப்பாண மாவட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக கலந்துரையாட வேண்டிய தேவைப்பாடு உள்ளமையினால் இக் கூட்டம் நடாத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் தலைவர் வரவேற்றார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், தற்போதைய எரிபொருள் விநியோகம், நகர அபிவிருத்தி திட்டம், சமூக சக்தி நிகழ்ச்சித் திட்டம், க்ளீன் ஸ்ரீலங்கா, விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட விடயங்கள் மற்றும் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
