;
Athirady Tamil News

யாழ் அரச அலுவலகம் ஒன்றில் களேபரம் ; திருமணத்தை நிறுத்தியதாக பீயோன் மீது தாக்குதல்!

0

யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக இளம் வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் , அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் பணியாற்ரி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர், அதே அலுவகத்தில் பணிபுரியும் தனது பல்கலைகழக நண்பி ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்ததாக கூறப்படுகின்றது.

விசாரிப்பதற்காக அலுவலகம் சென்ற பெண் விட்டார்
குறித்த பெண் உத்தியோகஸ்தர் திருமணமானவர் என்றும், அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த அபிவிருத்தி உத்தியோகஸ்தருக்கு திருமணம் முற்றான நிலையில், பெண் விட்டார் மாப்பிள்ளை தொடர்பில் விசாரிப்பதற்காக அலுவலகம் சென்று பீயோனிடம் விசாரித்ததாகவும் , அந்த தகவலை பீயோன் பிற ஊழியர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஏதோ காரணத்தினால் அந்த திருமணம் தடைப்பட்டதால் , ஆத்திரமடைந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பீயோன் மீது தாக்குதல் நடாத்தியதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பீயோன் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்க சென்றபோது அலுவலகப் பொறுப்பதிகாரி சமரசப்படுத்தி அழைத்து வந்த்தாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.