;
Athirady Tamil News

2030 -க்குள் நிலவில் நிரந்தர ஆராய்ச்சி மையம்: நாசா திட்டம்

0

வாஷிங்டன்,

பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்து வந்தது. இதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தநிலையில் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலவை சுற்றி விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்க நாசா திட்டமிட்டிருந்தது. தற்போது அந்த திட்டத்தை கைவிடுவதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நிலவில் நாசாவுக்கான நிரந்தரமான ஆராய்ச்சி மையத்தை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி (20 பில்லியன் டாலர்கள்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2030-க்குள் இதனை அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் ஜேரட் ஐசன்மேன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.