;
Athirady Tamil News

நோயாளர் காவு வண்டி , தாதியர்கள் இன்றி இயங்கிய இளவாலை வைத்தியசாலை – மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையில் தெரிய வந்த தகவல்

0
யாழ்ப்பாணம், இளவாலை வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் , நோயாளர் காவு வண்டிக்கான சாரதி நியமிக்கப்படாதமையால் , நோயாளர் காவு வண்டி காரைநகர் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 
இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காதமை, வைத்தியர் கடமையில் இல்லாதமை தொடர்பாக வெளியான செய்தி தொடர்பில் இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி இருந்தது.
அதற்கு அமைய, இளவாலை பிரதேச  வைத்தியசாலையின்  பொறுப்பு வைத்திய அதிகாரி மற்றும் யாழ்ப்பாண  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தமது விளக்கங்களை இன்றைய தினம் திங்கட்கிழமை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு சம்பித்துள்ளதுள்ளனர்.

இளவாலை பிரதேச  வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி தமது அறிக்கையில்,

உணவு இடைவேளைக்கு நான் சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்சமபவம் நடைபெற்றது. எமது வைத்தியசாலைக்கு நிரந்தர சாரதி இல்லாமையால், நோயாளர் காவு வண்டியினை தற்காலிகமாக யாழ்ப்பாண  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு விடுவித்துள்ளோம்.
மேலும் தமது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் இதுவரையும்  நியமனம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது அறிக்கையில்,

இனிவரும் காலங்களில் வைத்தியர்கள் தொடர்ந்து வைத்திசாலையில் தங்கியிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு தற்போது மீண்டும் 28ஆம் திகதி நோயாளர் காவுவண்டி ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது, இவ் வைத்தியசாலைக்கு தாதிய உத்தியோகத்தருக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி இதுவரை இல்லாத காரணத்தால் முகாமைத்துவ ஆளணி பிரிவுக்கு இவ்வைத்தியசாலைக்கு தாதிய உத்தியோகத்தர் ஆளணியை உருவாக்குவதற்கான கோரிக்கையைசமப்பித்துள்ளோம் என தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.