;
Athirady Tamil News

சொந்த நாட்டிலேயே ட்ரம்ப்பிற்கு எதிராக வெடித்த சர்ச்சை

0

ஈரானின் “முழு நாகரீகத்தையும் அழிப்பேன்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தலை, அவரது முன்னாள் தீவிர ஆதரவாளரான மார்ஜோரி டெய்லர் கிரீன் (Marjorie Taylor Greene) கடுமையாகக் கண்டித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவித்துள்ளன.

முன்னர் ட்ரம்ப்பின் மிக நெருங்கிய ஆதரவாளராக இருந்த அவர், தற்போது ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாட்டை “தீமை” என வர்ணித்துள்ளார்.

இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்கா மீது ஒரு குண்டு கூட விழவில்லை. அப்படியிருக்கையில் ஒரு முழு நாகரீகத்தையே எம்மால் அழிக்க முடியாது.

இது ஒரு தீய செயல் மற்றும் பைத்தியக்காரத்தனம்” எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவதற்காக அமெரிக்க அரசியலமைப்பின் 25ஆவது திருத்தச்சட்டத்தைப் பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த ஆக்ரோஷமான போக்கு நாட்டுக்கு ஆபத்தானது என்பதை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ஈரானின் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை அழிப்பதாக ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்கள் ‘யுத்தக் குற்றங்களுக்கு’ சமமானது என ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அவர்களும் ட்ரம்ப்பை பதவியிலிருந்து அகற்ற 25ஆவது திருத்தச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவிற்குள்ளேயே ட்ரம்ப்பிற்கு எதிரான உள்நாட்டு அழுத்தம் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.