;
Athirady Tamil News

16-ம் தேதி வங்காளம் செல்கிறார் ஹேக் ஹசீனா

0

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதற்கிடையே டிசம்பர் மாதம் வங்காதேசத்திற்கு திரும்ப உள்ளேன் என்று ஷேக் ஹசீனா சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்காக வங்காளதேச அரசிடம் புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார்.

ஆனால் மாணவர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில், வங்காளதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என்றும் இரு தரப்பு ஒப்பந்தத்தின்கீழ் ஷேக் ஹசீனாவை இந்தியா நாடுகடத்த வேண்டும் என்றும் வங்காளசேத அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா வருகிற 16-ந்தேதி வங்காளதேசத்திற்கு திரும்ப திட்டமிட்டு உள்ளார். வங்காளதேசத்தின் சுதந்திர தினமான அந்த தேதியை ஷேக் ஹசீனா தேர்ந்தெடுத்து உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தான் நாடு திரும்புவதற்கான விமான பயண ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று வங்காள தேச பிரதமர் தாரிக் ரகு மானை கேட்டு கொண்டு உள்ளார். இதுதொடர்பாக ஷேக் ஹசீனாவின் செய்தித் தொடர்பாளர் சையத் மொசம்மல் அலி கூறும் போது, 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந்தேதி வங்காள தேச அரசுக்குச் சொந்தமான விமானத்தில்தான் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனவே அவர் மீண்டும் டெல்லியிலிருந்து டாக்கா திரும்புவதற்கான விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். அரசியலமைப்புக்கு முரணாக ஷேக் ஹசீனாவை நாடு கடத்திய நிலையில், வருகிற டிசம்பர் 16-ந்தேதி வெற்றி தினத்தன்று அவர் வங்காளதேசத்திற்குத் திரும்புவதை சாத்தியமாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.

இதற்கிடையே ஷேக் ஹசீனா வங்காளதேசத்திற்குள் நுழைய முயன்றவுடன், அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று வெளியுறவுத்துறை இணை மந்திரி ஷமா ஒபாயத் இஸ்லாம் நேற்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் தனக்கு எதிரான வழக்கை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக ஷேக் ஹசீனா கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.