;
Athirady Tamil News

சீன விண்வெளி நிலையத்தில் பாகிஸ்தான் வீரர்; முதல் முறையாக கிடைத்த வாய்ப்பு

0

சீனா தனது ஷென்சோ-24 விண்கலத்தை 3 விண்வெளி வீரர்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜீஷான் அலியும் இடம்பெற்றுள்ளார். சீனாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் பங்கேற்கும் முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச்-2எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த விண்வெளிப் பயணத்தில் டாங் ஹாங்போ, வு யி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜீஷான் அலி ஆகிய 3 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் டாங் ஹாங்போ விண்கலத்தின் தளபதியாகவும், வு யி விமானப் பொறியாளராகவும் செயல்படுகின்றனர்.

ஒரு வாரம் விண்வெளிப் பயணம்

இந்த விண்கலம் சுமார் 3 மணி நேரத்தில் சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு முகமது ஜீஷான் அலி சுமார் ஒரு வாரம் தங்கியிருப்பார். பின்னர் ஷென்சோ-23 விண்கலம் மூலம் அவர் பூமிக்குத் திரும்புவார். பொதுவாக சீன விண்வெளி வீரர்கள் தியான்காங் விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாதங்கள் தங்கியிருந்து பணியாற்றுவார்கள்.

சீனாவின் சொந்த விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்நாடு சொந்தமாக தியான்காங் விண்வெளி நிலையத்தை உருவாக்கியது. சீன ராணுவத்தின் விண்வெளித் திட்டப் பங்களிப்பு தொடர்பான கவலைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2022-ம் ஆண்டு முதல் தியான்காங் விண்வெளி நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது சொந்தமாக விண்வெளி நிலையத்தை இயக்கும் ஒரே நாடாக சீனா உள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.