சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் சிறார்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய பிரச்சினைகள் குறித்து வெறும் ஒன்பது மாதங்களில் 9,613 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இது நாடு முழுவதும் சிறார்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலைமையை வெளிப்படுத்தியுள்ளது.
பதின்ம வயது கர்ப்பங்கள்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) தகவலின்படி, 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை மொத்தம் 9,613 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவற்றில் முக்கியமானவை:- 51 பதின்ம வயது கர்ப்பங்கள்,169 சிறுவர் பாலியல் வல்லுறவு சம்பவங்கள், 114 பாரிய பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்,364 பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகள், 196 நிர்வாணப் புகைப்படங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்திய இணையவழித் துன்புறுத்தல் முறைப்பாடுகள், 9 சிறுவர் திருமணங்கள், 1,889 சிறுவர்கள் மீதான கொடுமை தொடர்பான முறைப்பாடுகள், 2,387 பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகளாகும்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் பாலியல் குற்றங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. 153 சிறுவர் தொழிலாளர் முறைப்பாடுகள், 1,592 கட்டாயக் கல்வி தொடர்பான முறைப்பாடுகள், 146 சிறுவர்களைக் கடத்திச் செல்லுதல் தொடர்பான முறைப்பாடுகள், 40 மனிதக் கடத்தல் முறைப்பாடுகள், 103 ஆபாச வெளியீடுகள் தொடர்பான முறைப்பாடுகள். அத்துடன், 719 ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவு கோரிக்கைகள், 99 போதைப்பொருள் பாவனை தொடர்பான முறைப்பாடுகள்,46 குடும்ப வன்முறை முறைப்பாடுகள், 19 தற்கொலை முயற்சி சம்பவங்களும் முறையிடப்பட்டுள்ளன.
பதிவான முறைப்பாடுகளின் எண்ணிக்கை
மாவட்ட ரீதியாகக் கிடைத்த தகவலின்படி, கொழும்பில் 991, கம்பஹாவில் 821 மற்றும் குருநாகலில் 623 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
மேலும் இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் ஒப்பீட்டளவில் அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2026ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதமே அதிக முறைப்பாடுகள் பதிவான மாதமாகும்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தகவலின்படி: 2024ஆம் ஆண்டு, 53 பதின்ம வயது கர்ப்பங்கள், 500 பாலியல் தாக்குதல் சம்பவங்கள், 3 சிறுவர் கருக்கலைப்பு சம்பவங்கள், 42 சிறுவர் பாலியல் வல்லுறவு சம்பவங்கள், 321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகின. 2025ஆம் ஆண்டு, 46 பதின்ம வயது கர்ப்பங்கள், 545 பாலியல் தாக்குதல் சம்பவங்கள், 98 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் முறையிடப்பட்டுள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் புள்ளிவிபரங்களில் ஒரு முக்கியமான முரண்பாடும் காணப்படுகிறது.
ஒரே முறைப்பாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்கள் உள்ளடங்கியிருக்கலாம் என்பதால், குற்றங்களின் எண்ணிக்கைக்கும் மாவட்ட ரீதியாகப் பதிவான முறைப்பாடுகளின் எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடு ஏற்படலாம் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.