;
Athirady Tamil News

குர்திஸ்தான் எண்ணெய் வயல்களை கையகப்படுத்த ஈராக் பிரதமர் உத்தரவு

0

தனி நாடு கோரிய குர்திஸ்தான்

ஈராக்கில் 2003-ம் ஆண்டு அமெரிக்கா தலைமையி லான படைகள் நடத்திய படையெடுப்பிற்குப் பிறகு, அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத் தன்மை கேள்விக்குறியானது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் ஈராக்கில் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தின. மறுபுறம், ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற குர்திஸ்தான் பிராந்திய அரசுக்கும், தலைநகர் பாக்தாத்தில் உள்ள மத்திய அரசுக்கும் இடையே எண் ணெய் வளங்களைப் பங்கிடுவது மற்றும் எல்லைக் கட்டுப்பாடு தொடர்பாகப் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு குர்திஸ்தான் பிராந்தியம் தனி நாடு கோரி பொது வாக் கெடுப்பு நடத்தியதைத் தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க கிர்குக் உள்ளிட்ட பகுதிகளை ஈராக் ராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. மேலும், மத்திய அரசின் அனுமதியின்றி குர்திஸ்தான் நிர்வாகம் துருக்கிக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ததால் நிறுத்தப்பட்டிருந்த குழாய் வழி எண்ணெய் வினியோகம், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பிறகே மீண்டும் தொடங்கியது.

சட்டவிரோத எண்ணெய் கடத்தல்
இந்நிலையில், ஈராக்கின் புதிய பிரதமரான அலி அல்-சைதி, நாட்டில் வெளி நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஊழல் மற்றும் சட்டவிரோத எண்ணெய் கடத்தலுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். சமீபத்தில் அரசுக் குச் சொந்தமான ‘வடக்கு எண்ணெய் நிறுவனத்தில்’ நடந்த உயர்மட்ட விசாரணையில், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மற்றும் சில மூத்த அதிகாரிகள் இணைந்து பல ஆண்டுகளாகப் பல கோடி டாலர் மதிப்பிலான எண்ணெயைக் கடத்தி விற்பனை செய்தது அம்பலமானது.

இதையடுத்து, குர்திஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தியாலா, கிர்குக், சலாஹுதீன் மற்றும் நினிவே ஆகிய மாகாணங்களில் உள்ள எண்ணெய் வயல்களை ஈராக் மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வர பிரதமர் அலி அல்-சைதி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

பிரதமரின் அதிரடி நடவடிக்கை
அத்துடன், துருக்கி, ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் எல்லைகளை ஒட்டியுள்ள குர்திஸ்தான் பிராந்தியத்தின் அனைத்து எல்லைச் சாவடிகளையும் மத்திய எல்லை ஆணையம் கையகப்படுத்தவும் அவர் ஆணையிட்டார். கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் ஒப்புதலுடன் மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என குர்திஸ்தான் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் எல்லை ஆணையத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, வடக்கு எண்ணெய் நிறுவனத்தின் பொது இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கை ஈராக்-குர்திஸ்தான் இடையிலான பதற்றத்தை மீண்டும் அதிகரித் துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.