பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றால் மீண்டும் போர்; மிரட்டும் டிரம்ப்!
ஈரான் போர் நிறுத்தம் நல்லது தான் , ஆனால் முழுமையான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், அமெரிக்கா மீண்டும் போருக்கு திரும்பும் எனட்ரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் மிகவும் இலகுவாக போருக்குத் திரும்புவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவர் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.