;
Athirady Tamil News

வவுனியா பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

0

வவுனியா பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

வவுனியா பல்கலைக்கழகத்தில் ரூ.231 மில்லியன் செலவில் அமைப்பதாக திட்டமிடப்பட்டுள்ள மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கையின் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களினால் வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான புதிய ஆடவர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நேற்று (22.08) நாட்டி வைக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டமானது 231 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உப்பாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.