அதிகாலையில் நேர்ந்த கொடூர தாக்குதல் ; விருந்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது
அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின்போது, அவருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தகராறு முற்றிய நிலையில், அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதமொன்றால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.