வெடுக்குநாறி விவகாரம் – இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமைய கூடாது
;
அந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வெடுக்குநாறி மலையில் பௌத்த சமயத்துடன் தொடர்புடைய சான்றுகள் அதிகமாக இருப்பதாகவும் அதனடிப்படையில் அந்நிலங்களை பௌத்த சமயத்திற்கானதாக அடையாளமிட்டு வர்த்தமானி அறிவிப்பை அறிவிக்கவுள்ளதாகவும் துறைசார் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த அமைச்சரின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இது இனங்களுக்கிடையில் உண்மையை மறைப்பதாகவும் குறிப்பாக வரலாற்றை மறைப்பதாகவும் இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமையும் என்றுதான் நாம் நினைக்கின்றோம்.
முன்பு நாம் ஆட்சியில் இருந்தபோது வர்த்தமானி வெளியிடும் செயற்பாட்டை முன்னெடுக்காத வகையில் கையாண்டு ஒரு சுமூக நிலைக்கு கொண்டுவந்திருந்தோம்.
ஆனால் துரதிஸ்டவசமாக இன்றைய நிலமை அதை முற்றாக மாற்றியமைக்கதாக இருக்கின்றது.
அந்த வகையில் இவ்விடயத்தின் உண்மை நிலையை விளக்கி எவ்வாறான நடவடிக்கை எடுப்பதனூடாக இனங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்ற கருத்தை உள்கடக்கி அனுர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்ப இருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.